ஐ.பி.எல் ஏலத்தில் அதிகூடிய விலைக்கு எடுக்கப்பட்டார் கிரிஸ் மொரிஸ்

ஐ.பி.எல் ஏலத்தில் அதிகூடிய விலைக்கு எடுக்கப்பட்டார் கிரிஸ் மொரிஸ்

14 வது இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்கான வீரர்களுக்கான ஏலம் தற்போது சென்னையில் இடம்பெற்றது.

தென்னாப்பிரிக்காவின் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிரிஸ் மொரிஸ் இந்திய ரூபாயில் 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, ஐ.பி.எல் வரலாற்றில் அதிகளவான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரராக கிரிஸ் மொரிஸ் பதிவாகியுள்ளார்.

இதற்கு முன்னர் இந்திய அணியின் யுவராஜ் சிங் இந்திய ரூபாவில் 16 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார்.