
வீடுகளில் உள்ள கொரோனா நோயாளிகளால் ஆபத்து! டாக்டர் ஹரித அலுத்கே எச்சரிக்கை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை சில நாட்கள் வீட்டில் வைத்திருப்பது என்பது ஏனையோருக்கம் நோயை பரப்பும் ஆபத்தை அதிகரிப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே இதை தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொழும்பு மாவட்டத்தின் சில இடங்களில், நோயாளிகள் 5-6 நாட்கள் வீட்டில் தங்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. கோவிட் மையங்களுக்கு அனுப்ப தாமதிப்பதும், அவர்கள் செல்ல மறுப்பதும் ஒரு பிரச்சினை என்றும் அவர் கூறினார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் வீட்டில் இருக்கும் போது அவருக்கு நோய்க்கான அறிகுறிகள் குறைந்துகொண்டே செல்லும். இது இயற்கையானதே.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குறித்த நபர் தனது பி.சி.ஆர் பரிசோதனை சரியானதா என சந்தேகிக்கின்றனர்.
அவ்வாறானவர்களின் ஒருவர் வைத்தியசாலைக்கு வருகின்றார். ஏனைய 4 அல்லது 5 பேர் வீடுகளிலேயே தங்கி விடுகின்றனர்.
எனினும் இது ஆபத்தான ஒரு விடயம். இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டாக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.