திருகோணமலை எண்ணெய் குதங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம்

திருகோணமலை எண்ணெய் குதங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம்

திருகோணமலை துறைமுக எண்ணெய் குதங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகளவிலான பங்குகளை கொண்ட கூட்டு நிறுவனம் ஒன்றின் ஊடாக அதனை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறப்பிட்டுள்ளார்