இலங்கையுடன் நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ள பல நாடுகள்

இலங்கையுடன் நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ள பல நாடுகள்

ஏர் அரேபியா(air arabia), ஃப்ளை டுபாய்(flydubai Airline) மற்றும் சலாம் ஏர்(SalamAir Airline) ஆகியவை இலங்கையுடன் நேரடி விமான சேவையைத் தொடங்கியுள்ளன.

அதே நேரத்தில் ஜசீரா(Jazeera Airways Airline) மற்றும் வளைகுடா ஏர்(Gulf Air Airline) ஆகியவையும் இலங்கையுடன் நேரடி விமான சேவையை தொடங்க முடிவு செய்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்தார்.

அத்துடன், ஜனவரி 21 முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறக்கப்பட்டதிலிருந்து 3820 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் உக்ரைனைச் சேர்ந்தவர்கள். அவர்களின் எண்ணிக்கை 1374 என தெரிவிக்க்பபட்டுள்ளது.

மேலும் கஜகஸ்தானில் இருந்து 526 சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவில் இருந்து 443 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வந்துள்ளனர்.