கெரவலபிட்டியில் பாரிய தீ விபத்து! உடனடியாக வரவழைக்கப்பட்ட உலங்குவானூர்திகள்

கெரவலபிட்டியில் பாரிய தீ விபத்து! உடனடியாக வரவழைக்கப்பட்ட உலங்குவானூர்திகள்

கெரவலபிட்டி அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகே உள்ள பாரிய குப்பை மலையில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் குப்பை சேகரிக்கும் இடத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அப்பகுதி முழுதும் புகைமண்டலமாக காணப்படுகின்றது.

தீயணைப்பு வீரர்கள் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா விமானப்படையின் உலங்குவானூர்திகளும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது