கொடையாளிகளுக்கு குருதி வங்கியின் முக்கிய வேண்டுகோள்

கொடையாளிகளுக்கு குருதி வங்கியின் முக்கிய வேண்டுகோள்

கொடையாளிகளிடம் குருதி வங்கி முக்கிய வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளது.

குருதி வங்கியில் குருதிக்கான தட்டுப்பாடு நிலவுவதால், கொடையாளிகள் குருதி தானம் செய்ய முன்வருமாறு குருதி வங்கி கோரியுள்ளது.

குருதிதானம் வழங்க முன்வரும் கொடையாளிகள் 011 53 32 153 அல்லது 011 53 32 154 ஆகிய எண்களுக்கு தொடர்புகளை மேற்கொண்டு மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளமுடியும்.