கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட நைஜீரியப் பிரஜை

கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட நைஜீரியப் பிரஜை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருந்த ஒரு வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொழும்பு - மவுண்ட் லவனியா, படோவிட பகுதியில் வைத்து மவுண்ட்லவனியா பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்.

அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.