ரிலாவல சந்தியில் தொடரும் விபத்துக்கள்-கடந்த வருடத்தில் மாத்திரம் 25 சம்பவங்கள்(காணொளி)

ரிலாவல சந்தியில் தொடரும் விபத்துக்கள்-கடந்த வருடத்தில் மாத்திரம் 25 சம்பவங்கள்(காணொளி)

கஹதுடுவ-ரிலாவல சந்திப்பில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உந்துருளி ஒன்றும் சிற்றுர்ந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த பகுதியில் தொடர்ந்தும் விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறான நிலைமைக்கு மாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன்,மேற்படி பகுதியில் கடந்த வருடத்தில் 25 விபத்து சம்பவங்கள் பதிவானதாக காவல்துறை குறிப்பிடுகின்றது.

அதேபோல், இந்த பகுதியில் கடந்த ஒன்றரை மாதக்காலப்பகுதிக்குள் மாத்திரம் 4 விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது