காலியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களில் 435 பேர் கைது!

காலியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களில் 435 பேர் கைது!

காலியில் நேற்றைய தினம் 5 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த விசேட போக்குவரத்து சுற்றிவளைப்புக்களில் 435 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தல், பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல், தலைக்கவசம் இன்றி உந்துருளியில் பயணித்தமை மற்றும் சாரதி அனுமதி பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி பயணித்த குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.