
உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நீதிமன்றத்தினால் நிராகரிப்பு
உயிரிழந்த பின் கொவிட்-19 தொற்றாளர் என அடையாளங் காணப்பட்டவரிடம் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படாது நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளர் அர்ஜூன ஒபேசேகர மற்றும் மாயதுன்னே கொரயா ஆகிய நீதியர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
திருகோணமலை பகுதியைச் சேர்ந்த எம்.ஈ.எல் மொஹமட் ஹக்கீம் என்பவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் விக்கும் டி ஆப்ரு, குறித்த மனுவின் எந்தவித அடிப்படை தன்;மையும் இல்லை எனவும் அதனை நிராகரிக்குமாறும் எதிர்ப்பை வெளியிட்டார்.
உயிரிழந்தவரின் சார்பில் எந்தவித ஆக்கப்பூர்வமான சமர்ப்பனங்கள் மற்றும் சாட்சிகள் நீதிமன்றில் முன்வைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்