கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

இன்று (18) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 722 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது.

அவர்களில் 09 நபர்கள் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

மிகுதி 713 பேரில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 223 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 160 பேரும் கண்டி மாவட்டத்தில் 49 பேரும் மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் புத்தளம் மாவட்டத்தில் 22 நபர்களும் யாழ். மாவட்டத்தில் இருவரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 10 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 07 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

கொழும்பு – கோட்டை பகுதியில் ஐவர், கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் நால்வர், நாரஹேன்பிட்ட பகுதியில் 16 நபர்கள், வெள்ளவத்தை பகுதியில் 08 பேர், பொரளை பகுதியில் 09 பேர், தெமட்டகொடை பிரதேசத்தில் 29 நபர்கள், மருதானை பகுதியில் 17 நபர்கள், புறக்கோட்டை பகுதியில் 07 நபர்கள், கொட்டாஞ்சேனை பகுதியில் 12 பேர், கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் 06 பேர், மட்டக்குளி பகுதியில் 08 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா – கட்டுநாயக்க பகுதியில் 18 பேருக்கும் நீர்கொழும்பில் 07 பேருக்கும் வத்தளை பிரதேசத்தில் 06 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று, அம்பாறை, மஹாஓயா மற்றும் திருக்கோவில் ஆகிய 4 பகுதிகளிலும் தலா ஒருவர் வீதம் 4 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

யாழ். சாவகச்சேரி மற்றும் நல்லூர் ஆகிய இரு பகுதிகளில் தலா ஒருவர் வீதம் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – முழங்காவில் பிரதேசத்தில் 10 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று (18) காலை வரையில் நாட்டில் 77,906 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு 71,176 பேர் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 13 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்திலேயே (17) அதிக கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.