
கொரோனா முகாமைத்துவம் தொடர்பான மெய்நிகர் மாநாடு இன்று; இலங்கையும் பங்கேற்பு
கொரோனா நோய்த்தொற்று முகாமைத்துவம் தொடர்பான பிராந்திய மாநாட்டை இன்று இந்தியா ஏற்பாடு செய்துள்ளது.
'கொரோனா முகாமைத்துவ அனுபவம், நல்ல நடைமுறைகள், முன்னோக்கிய பாதை' என்ற தலைப்பில் இந்த மாநாடு மெய்நிகர் முறையில் இடம்பெறவுள்ளது.
இந்த மாநாட்டிற்காக தெற்காசிய நாடுகளான இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், மாலைத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் மொரீஷியஸ், சிஷேல்ஸ் ஆகிய நாடுகளும் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் சுகாதார செயலாளர் தலைமை வகிக்கும் இந்த மாநாட்டுக்கு, ஒவ்வொரு நாட்டில் இருந்தும் அதன் சுகாதார செயலாளர் மற்றும் கொரோனா மேலாண்மை தொழில்நுட்பக் குழுத் தலைவர் என தலா இருவர் அழைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன