
இந்தியாவில் 88.5 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
இந்தியா முழுவதும் 88.5 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் இதுவரை 88.5 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மாத்திரம் மாலை 6 மணி வரை 190,665 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 8,857,341 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் சுகாதாரப் பணியாளர்கள் 6,129,745 பேருக்கு முதல் முறையாகவும், 2,16,339 பேருக்கு இரண்டாம் முறையும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது