மனிதர்களை பயன்படுத்தி கொவிட்-19 வைரஸ் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ள தீர்மானம்

மனிதர்களை பயன்படுத்தி கொவிட்-19 வைரஸ் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ள தீர்மானம்

உலகில் முதற்தடவையாக மனிதர்களை பயன்படுத்தி கொவிட்-19 வைரஸ் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ள பிரித்தானிய விஞ்ஞானிகள் ஆயத்தமாகியுள்ளனர்.

இந்த ஆய்வு பணிகள் எதிர்வரும் வாரமளவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்காக 18 முதல் 30 வயதிற்கு இடைப்பட்ட தேக ஆரோக்கியத்துடன் உடைய 90 இளைஞர் யுவதிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பான மற்றும் உரிய மருத்துவ கிரமங்களுக்கு அமைய அவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றப்பட்டு அதன் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மலேரியா, கொலரா மற்றும் மஞ்சள்காமாலை ஆகிய நோய்களுக்கு இந்த முறைமை மூலம் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றதாக பிரித்தானிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்