
நாவலப்பிட்டியில் 20 வயது இளைஞர் ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு!
நாலப்பிட்டி பிரதேசத்தில் மகாவலி கங்கையிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பபட்டமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பணி நிறைவடைந்து வீடு நோக்கிச் சென்ற நாவலப்பிட்டியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் நாவலப்பிட்டி நகரிலுள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் பணியாற்றிவந்திருந்த நிலையில், நேற்று(16) இரவு 8 மணியளவில் பணி நிறைவடைந்து வீடு நோக்கி நடந்து சென்றுள்ளார்.
இளைஞர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், வீட்டை அவரை தேடியபோது, பவ்வாகம பிரதேசத்திலுள்ள பாலம் ஒன்றுக்கும் அருகில் மகாவலி கங்கையிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
இளைஞரின் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்குமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
இது விபத்தா அல்லது தற்கொலையா எனக் கண்டறியும் பொருட்டு நாவலப்பிட்டி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்