வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு

வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு

இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அவர், இந்த அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளார்.

37 வயதான இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான தம்மிக்க பிரசாத் 25 டெஸ்ட், 24 ஒரு நாள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.