பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 10,579 மாணவர்களை உள்ளீர்க்க நடவடிக்கை

பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 10,579 மாணவர்களை உள்ளீர்க்க நடவடிக்கை

இந்த வருடம் பல்கலைக்கழகங்களுக்கு 10,579 மாணவர்களை மேலதிகமாக இணைத்துக்கொள்வதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய,பேசிய அவர் மருத்துவ பீடத்திற்கு 481 மாணவர்களையும்,பொறியியல் பீடத்திற்கு 565 மாணவர்களையும், தொழில்நுட்ப கல்வி பிரிவிற்கு 1,099 மாணவர்களையும் இணைத்துக்கொள்ளவுள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அதேபோல், விவசாயம் மற்றும் வணிகப்பிரிவிற்கு 1,803 மாணவர்களையும், கலைப்பிரிவிற்கு 1,680 மாணவர்களையும்,அழகியல் சார் கல்வி பிரிவிற்கு 318 மாணவர்களையும் மேலதிகமாக இணைத்துக்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.