திக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் 600 கிலோ மீன்கள் திருட்டு

திக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் 600 கிலோ மீன்கள் திருட்டு

வத்தளை - திக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் நெடுநாள் படகொன்றில் இருந்து பெருந்தொகையான மீன்கள் களவாடப்பட்டுள்ளதாக வத்தளை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தின்போது சுமார் 600 கிலோ கிராம் எடை கொண்ட மீன்கள் களவாடப்பட்டுள்ளன.

எனினும் களவாடப்பட்ட மீன்களின் மொத்த பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை.

எவ்வொறெனினும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யும் பொருட்டு வத்தளை காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்