
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டாவது நாளாக கொவிட்-19 தடுப்பூசி
இராஜாங்க அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க, ஜயந்த சமரவீர, டி.வி.சானக ஆகியோருக்கு இன்றைய தினம் கொவிட்-19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை இன்று இரண்டாவது நாளாகவும் இராணுவ வைத்தியசாலையில் இடம்பெற்றிருந்தது.
இதன்போதே அவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க, வீரசுமன வீரசிங்க, குணதிலக்க ராஜபக்ஸ, சந்திம வீரக்கொடி, ரஞ்சித் பண்டார மற்றும் குமார வெல்கம ஆகியோருக்கும் இன்றைய தினம் கொவிட் 19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
அதேநேரம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவும் இன்றைய தினம் இராணுவ வைத்தியசாலையில் கொவிட்-19 தடுப்பூசியினை பெற்றுக்கொண்டிருந்ததுடன் இதன்போது அங்கு இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவும் பிரசன்னமாகியிருந்தார்