சிறுத்தையை சிறைபிடிக்குமாறு கோரிக்கை விடுத்த மக்கள்

சிறுத்தையை சிறைபிடிக்குமாறு கோரிக்கை விடுத்த மக்கள்

ஹட்டன்-குடாகம பகுதியிலும் அதனை அண்டிய பல பகுதிகளிலும் சுற்றித்திரியும் சிறுத்தை ஒன்றை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என பிரதேசவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறித்த பகுதிகளில் தினமும் இரவு வேளையில் சிறுத்தை சுற்றித்திரிவதாக பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் பல வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளும் சிறுத்தைக்கு இறையாவதாக தெரிவிக்கப்படுகின்றது