கொவிட் தடுப்பூசியை ஏற்க மறுக்கும் கஜேந்திரகுமார் அணி

கொவிட் தடுப்பூசியை ஏற்க மறுக்கும் கஜேந்திரகுமார் அணி

இராணுவ வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதனை தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இதனை எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தினார்.

கடந்த காலங்களின் இராணுவத்தின் செயற்பாட்டை தாம் ஏற்றுக்கொள்ள போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.

கொவிட் 19 தடுப்பூசியானது மாவட்ட ரீதியிலான சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் செலுத்துவதற்கான வசதிகள் உள்ள போதிலும், அதனை இராணுவ வைத்தியசாலையில் செலுத்துவதற்கான காரணம் ஏன்? எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்