இலங்கையில் உலர்ந்த மீன்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு இந்திய மீனவர்கள் கோரிக்கை

இலங்கையில் உலர்ந்த மீன்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு இந்திய மீனவர்கள் கோரிக்கை

இலங்கையில் கருவாடு உள்ளிட்ட உலர்ந்த மீன்களுக்காக விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடையை நீக்குவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு இந்திய மத்திய அரசாங்கத்திடம் அந்த நாட்டின் மீனவர்கள் கோரியுள்ளனர்.

இந்த தடையால் 15,000 மெற்றிக் டன் உலர்ந்த மீன்கள் களஞ்சியசாலைகளில் தேங்கி இருப்பது குறித்து மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளதாக த இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் தமிழக மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சில ஏற்றுமதியாளர்களும் வங்கிகளுடன் தங்கள் நிதிக் நடவடிக்கைகளை தொடர முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இந்திய மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு இலங்கையில் உலர்ந்த மீன்களுக்காக விதிக்கப்பட்டுள்ள தடையினை நீக்குவது குறித்து கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருமாறு இந்திய மீனவர்கள் கோரியுள்ளதாக த இந்து செய்தி தெரிவித்துள்ளது