யாழ்ப்பாண சித்த மருத்துவ பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டப் பேரணி

யாழ்ப்பாண சித்த மருத்துவ பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டப் பேரணி

யாழ்ப்பாணத்தில் சித்த மருத்துவ பட்டதாரிகளினால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள மாணவர்களை பட்டதாரி நியமனங்களுக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்பாட்டம் பேரணி இடம்பெற்றதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட சித்த மருத்துவ பட்டதாரி மாணவர்கள், தங்களுடைய கோரிக்கைகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பார்ட்டப் பேரணி சித்தமருத்துவ பீடத்திலிருந்து சித்த மருத்துவ வைத்தியசாலை வரை இடம்பெற்றிருந்தது