வடக்கு ஆளுநர் விவசாயிகளிடம் விடுத்துள்ள கோரிக்கை

வடக்கு ஆளுநர் விவசாயிகளிடம் விடுத்துள்ள கோரிக்கை

முல்லைத்தீவில் 137 மில்லியன் ரூபா மதிப்பிலான தானிய களஞ்சியத்திற்கான அடிக்கல்லினை வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் நாட்டி வைத்தார்.

வட மாகாண காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் கீழ், உலக வங்கியின் நிதி உதவியுடன் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் 137 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள தானிய களஞ்சியத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ், வடமாகாண காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் செயலாளர் சிவபாலசுந்தரன், வடமாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.சிவகுமார், வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் வீ.பிறேம்குமார், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன், உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு அடிக் கல்லினை நாட்டி வைத்தனர்.

குறித்த பகுதியில் தானியக் களஞ்சியமும் அதனோடு இணைந்து நெல் உலரவிடும் தளம் என்பன அமைக்கப்படவுள்ளன.

இதன்போது கருத்து வெளியிட்ட ஆளுநர், விவசாயிகள் அவசரப்பட்டு குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்யாது உங்கள் உற்பத்திப் பொருளுக்கு விலையை தீர்மானிப்பவர்களாக நீங்கள் மாறவேண்டும்.

அரசாங்கம் இறக்குமதியை தடைசெய்வது உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு நியாய விலையை பெற்றுக்கொடுக்கவே என்றார்.