தென்னாப்பிரிக்க- அயர்லாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டித் தொடர் ஜூலை மாதத்தில்

தென்னாப்பிரிக்க- அயர்லாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டித் தொடர் ஜூலை மாதத்தில்

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் பிற்போடப்பட்டதை அடுத்து தென்னாப்பிரிக்க அணி எதிர்வரும் ஜூலை மாதத்தில் அயர்லாந்துக்கான கிரிக்கட் சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது.

இதற்கமைய, அயர்லாந்துக்கு எதிராக 3 ஒருநாள் சர்வதேச மற்றும் 3 20 க்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்க அணி பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கிரிக்கட் போட்டித் தொடரானது எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அயர்லாந்து அணிக்கும், சிம்பாவே அணிக்கும் இடையிலான கிரிக்கட் தொடரானது எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.