சிறை அதிகாரிகளுக்கும் வருகிறது தடுப்பூசி

சிறை அதிகாரிகளுக்கும் வருகிறது தடுப்பூசி

நாட்டில் கொரோனா தடுப்பூசி திட்டம் மருத்துவர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் படையினருக்கு முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்பட்டன.

இந்தநிலையில் கொவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி திட்டத்தில் சிறைச்சாலை அதிகாரிகளையும் சேர்த்துக்கொள்ள சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இன்று தெரிவித்தார்.

இதன்படி நாளை மேல் மாகாணத்தில் கொழும்பு, மஹர, களுத்துறை மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளின் அதிகாரிகள் தடுப்பூசியைப் பெறவுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

இத்திட்டம் அடுத்த நான்கு நாட்களுக்கு இடம்பெறும். அதன்பின் அது மேல் மாகாணத்துக்கு வெளியேயுள்ள பிற சிறைச்சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

இதேவேளை சிறைக் கைதிகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.