யாழ்.மாநகர முதல்வருக்கு எதிராக மன்னாரில் தொடரப்பட்ட வழக்கு
நீதிமன்ற கட்டளையை மீறி பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரையான பேரணியில் கலந்து கொண்ட யாழ்.மாநகரசபை உறுப்பினருக்கு எதிராக மன்னார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே பேரணிக்கு தடைகோரி ஏ அறிக்கையூடாக மன்னார் பொலிஸ் நிலையத்தால் தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்று வழங்கிய தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து “பி” அறிக்கை ஊடாக பேரணியில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், வி.மணிவண்ணன் மட்டுமே பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு பதில் நீதிவான் முன்னிலையில் இன்று (15.02.2021) விசாரணைக்கு எடுக்கப்பட்டு தவணையிடப்பட்டது.