
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஊழியருக்கு கொரோனா
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஊழியர் ஒருவர் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரிக்கு நேற்று (13) வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்த அதிகாரி இலங்கை அரசு வழங்கிய வழிகாட்டுதல்களின் படி ஒரு சிகிச்சை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்..
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர் வெளி நபர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை.
மேலும் அவருடன் பழகியவர்களை அடையாளம் காண்டு சுய தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அலுவலக வளாகத்தை கிருமி நீக்கம் செய்வதன் மூலம் ஆபத்தை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.