‘வணக்கம் தமிழ்நாடு’ என தமிழில் கூறிய இந்தியப் பிரதமர்! ஒளவையார், பாரதியாரின் வரிகளையும் சுட்டிக்காட்டினார்

‘வணக்கம் தமிழ்நாடு’ என தமிழில் கூறிய இந்தியப் பிரதமர்! ஒளவையார், பாரதியாரின் வரிகளையும் சுட்டிக்காட்டினார்

‘வணக்கம் சென்னை’, ‘வணக்கம் தமிழ்நாடு’ என தமிழில் கூறி உரையை பிரதமர் மோடி ஆரம்பித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் தனது உரையில் ஒளவையார், பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார்.

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்றைய தினம் சென்னை வந்தார் பிரதமர் மோடி.

பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்ட மேடையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

சென்னை மக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் தமிழக அரசின் வளர்ச்சிக்கு உதவும்.

வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும் என்ற ஒளவையார் பாடலை மேற்கோள் காட்டினார்.

வேளாண் உற்பத்தியில் சாதனை படைத்த தமிழக விவசாயிகளுக்கு பாராட்டுகள். நீர் ஆதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.

கொரோனா காலத்திலும் திட்டமிட்டப்படி மெட்ரோ வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன. பாரதியார் பாடலான ‘ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்’ பாடலையும் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியிருந்தார்.