யாழில் கொத்தணியாக மாறும் மற்றுமொரு பிரதேசம்?
அச்சுவேலி சந்தை வியாபாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று அச்சுவேலி சந்தையில் பொதுமக்கள் வருகை குறைவடைந்துள்ளது.
நேற்று சந்தை வியாபாரிகள் நால்வர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று குறித்த வியாபாரிகளுடன் தொடர்புடையவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் அச்சுவேலி சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.
கொரோனா தொற்றுக்குள்ளான நான்கு வியாபாரிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சந்தையில் உள்ள கட்டிட தொகுதியில் ஒரே வரிசையில் இருந்தே வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே வியாபாரிகளுடன் நேரடியாக தொடர்புடையவர்களுக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதோடு அவர்களோடு நேரடியாக தொடர்புபட்டவர்கள் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.