யாழில் புதிய கொரோனா உறுதி! அரசாங்க அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை

யாழில் புதிய கொரோனா உறுதி! அரசாங்க அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை

யாழ். மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா நிலைமை அதிகரித்து புதிய கொத்தணி உருவாகும் நிலை காணப்படுகின்றது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

அச்சுவேலி சந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் - அச்சுவேலி சந்தைப் பகுதியில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

யாழ் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா நிலைமை சற்று குறைவடைந்து, கடந்த வாரங்களில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

இருப்பினும் நேற்று முன்தினமும் நேற்றும் திடீரென தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நேற்று முன் தினம் 200 ஆக காணப்பட்ட தொற்று உறுதியானோர் எண்ணிக்கை நேற்றைய தினம் 206 ஆக அதிகரித்திருக்கின்றது.

இந்த நிலைமையில் யாழ். மாவட்ட மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய கட்டமாக இருக்கின்றது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.