விளையாட்டுதுறை ஆசிரியர்கள் இணைப்பு - தேசிய, சர்வதேச வெற்றிகளைப் பெற்றவர்களுக்கு முக்கிய இடம்

விளையாட்டுதுறை ஆசிரியர்கள் இணைப்பு - தேசிய, சர்வதேச வெற்றிகளைப் பெற்றவர்களுக்கு முக்கிய இடம்

விளையாட்டுத்துறைக்கு ஆசிரியர்களை வேலையில் இணைத்துக்கொள்ளும் போது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சுடன் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் இது தொடர்பாக மாகாண சபைகளிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்தார்.

இதற்;;கமைவாக இவ்வாறான வெற்றிகளைப் பெற்றவர்களுக்கு பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் ஏனைய நிறுவனங்களில் விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளராக பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்