வட மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா..!
வட மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கொவிட்-19 தொற்றுதியாகியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுக்கூடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட 665 பரிசோதனைகளில் 6 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
இவ்வாறு தொற்றுறுதியானவர்களில் கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த மூன்று பேரும் அடங்குவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியல் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர்களுடன் தொடர்புடையவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது