
மியன்மாரில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம்..!
மியன்மாரின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் நைபிவ்டோவில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அதிகாரிகளை கடந்த முதலாம் திகதி அந்த நாட்டு இராணுவம் தடுத்து வைத்து ஆட்சியை கைப்பற்றியது.
இந்த நிலையில், அவர்களை விடுவித்து ஜனநாயகத்தை மீள ஏற்படுத்துமாறுகோரி அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது