சற்றுமுன் கிடைத்த தகவல்- யாழ்ப்பாணத்திலும் பதிவானது கொரோனா மரணம் -

சற்றுமுன் கிடைத்த தகவல்- யாழ்ப்பாணத்திலும் பதிவானது கொரோனா மரணம் -

கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தில் முதலாவது நபர் இன்று உயிரிழந்துள்ளார்.

தீவகம் வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய நோயாளி ஒருவரே உயிரிழந்ததாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், வடக்கில் நான்காவது நபர் கொவிட் -19 நோயால் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ஸ்ரோக் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்ட நிலையில் அநுராதபுரம் சிகிச்சை நிலையத்துக்கு அவர் மாற்றப்பட்டார்.

எனினும் அவரது உடல்நிலை கடுமையானதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று மீளவும் மாற்றப்பட்டார். அவரை கொவிட் -19 தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டது.

எனினும் அவர் சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது சடலம் கொவிட் -19 சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய உறவினர்கள் சிலரின் பங்கேற்புடன் தகனம் செய்யப்படும்" என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் வவுனியாவில் ஒருவரும் மன்னாரில் இருவரும் என மூவர் கொவிட் -19 நோயால் உயிரிழந்த நிலையில், இன்று யாழ்ப்பாணத்தில் முதலாவது நோயாளி உயிரிழந்துள்ளார்.