யாழில் வீட்டிலிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திக்கொள்ளை; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

யாழில் வீட்டிலிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திக்கொள்ளை; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

யாழ்.கோண்டாவில் பகுதியில் வீடு உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் 24 மணித்தியாலத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள், நகைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கோண்டாவில் - செபஸ்ரியன் விதியில் உள்ள வீடொன்றை நேற்று அதிகாலை உடைத்து உள்நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிருந்தவரை அடித்து காயப்படுத்திவிட்டு சுமார் 6 பவுண் தாலிக் கொடியினை பறித்து சென்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் 24 மணித்தியாலத்திற்குள் 3 கொள்ளையர்களை கைது செய்ததுடன், கொள்ளையடிக்கப்பட்ட 6 பவுண் தங்க சங்கிலியை மீட்டிருக்கின்றனர்.