வட மாகாண கல்வியை கட்டியெழுப்புவதற்கான சிறந்த நடவடிக்கைகள் முன்னெடுப்பு...!
வட மாகாணத்தின் கல்வியை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கை சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மக்களுக்கு கல்வி முக்கிய விடயமாகும்.
வட மாகாணத்தில் பாடசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள், ஆசிரியர் பற்றாக்குறை, போக்குவரத்து பிரச்சினை, தேசிய பாடசாலைகளை இனங்காணல் உள்ளிட்டவற்றை கலந்துரையாடி சிறந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
இது குறித்த முன்னேற்ற அறிக்கை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பெற்றுக்கொள்ளப்படும்.
இந்த குறைப்பாடுகளை நிவர்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்