பேரணியைத் தடுக்க மாலு சந்தியில் காத்திருந்த பொலிஸார்
கொரோனா பரவல் காரணம் காட்டி பேரணியைத் தடுக்க பொலிஸார் முயற்சி மாலுசந்தியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணி பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாணம் மாநகரை இன்று பிற்பகல் வந்தடைந்தது.
இதையடுத்து, யாழ். பல்கலைக்கழகம் சென்று, நல்லூர் கோயில், தியாகி திலீபன் நினைவிடம் சென்று பருத்தித்துறை வீதி வழியாக கல்வியங்காடு, கோப்பாய், நீர்வேலி, வல்லைவெளி, புறாபொறுக்கி சந்தி, கரணவாய், நெல்லியடி, மாலுசந்தி, மந்திகை, பருத்தித்துறை, திக்கம், அல்வாய், வதிரிச்சந்தி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை தீருவில் வெளி, வல்வெட்டித்துறை நகரம், நெடியகாடு ஊடாக பொலிகண்டியைச் சென்றடையவுள்ளது.
இந்நிலையில் குறித்த பேரணி பொலிகண்டியைச் சென்றடைய விடாது தடுக்கும் நோக்கில் பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா பரவலைத் காரணம் காட்டி பேரணியில் கலந்துகொண்டவர்களை தடுக்கும் முயற்சியில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர் எனவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.