வியப்பில் ஆழ்த்திய யாழ்.பல்கலைக்கழக மாணவனின் அதீத கண்டுபிடிப்பு!

வியப்பில் ஆழ்த்திய யாழ்.பல்கலைக்கழக மாணவனின் அதீத கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களினால் உருவாக்கப்பட்ட செயல்திறன் மிக்க போர்மூலா வான் மகிழூர்தி, மற்றும் உயிர்வாயுவினால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வண்டி உருவாக்கி வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

குறித்த கண்டபிடிப்புக்களை கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழுத் தலைவருமான அங்கஜன் இராமனாதன், கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைகழக துணைவேந்தர் உட்பட பீடாதிபதிகள் பார்வையிட்டதுடன் குறித்த தொழில்நுட்ப பீட மாணவர்களின் திறமைமிக்க உருவாக்கத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.