கொழும்பு வாழ் மக்களுக்கான விசேட செய்தி!!!

கொழும்பு வாழ் மக்களுக்கான விசேட செய்தி!!!

பார்க் என்ட் றைட் நகர பேருந்து சேவை, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொழும்பு மாவட்டம் முழுவதும் விஸ்தரிக்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

நகரப்புற வாகன நெரிசலுக்கு தீர்வாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பேருந்து சேவையானது தற்போது வெற்றிகரமாக இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

செலவை ஈடுசெய்வதற்கு போதுமான வருமானத்தை இலங்கை போக்குவரத்து சபை தற்போது ஈட்டி வருவதாகவும் அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய காலத்திற்குள் இந்த சேவையினை நடைமுறைப்படுத்தி அதில் வெற்றிக்கிடைத்துள்ளது.

பயணிகள் காலை மற்றும் மாலை வேளையில் இந்த சேவையினை பயன்படுத்திய போதிலும், மதிய வேளையில் பயன்படுத்துவது குறைந்தளவிலேயே காணப்பட்டது.

அதற்கான காரணிகள் கண்டறியப்பட்டு பயணிகளின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த சேவையினை மேலும் மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர் கொழும்பு, கண்டி , 120 வீதி மற்றும் காலி வீதியில் இந்த சேவையினை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்