
நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளைஞரொருவர் பலி - (படங்கள் இணைப்பு)
அண்மைக்காலமாக சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் பிம்புரத்தேவ நீர்த்தேக்கத்திற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த இளைஞரொருவர் நேற்று உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நீர்த்தேக்கத்தில் நீர் பெருக்கெடுத்ததால் இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
கண்டி கலகெதர பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பிம்புரத்தேவ நீர்த்தேக்கத்தின் பெருக்கெடுப்பையடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றுள் சில: