
60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்த திட்டம்..!
60 வயதிற்கு மேற்பட்டோருக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஒக்ஸ்போர்ட-எஸ்ட்ராசெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய் மற்றும் கொவிட்-19 தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உடனடியாக 9 மில்லியன் ஒக்ஸ்போர்ட-எஸ்ட்ராசெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவினால் தருவிக்கப்பட்ட குறித்த தடுப்பூசிகள் முன்னுரிமைக்கு அமைய சுகாதார தரப்பினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.
இதன்படி சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.