
இலஞ்சம் வாங்கிய சுகாதார நிர்வாகி கைது..!
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால்
கோட்டே மாநகர சபையின் சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகத்தில் பணி புரியும் சுகாதார நிர்வாகி ஒருவர் 10,000 ரூபாவினை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட காரணத்திற்காக இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தெல்கந்தையில் கைது செய்யப்பட்டதாக ஆணைகுழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
வீதிகளில் குப்பைகள் கொட்டுவது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கு குறித்த பணத்தொகையை இலஞ்சமாக பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.