வடக்கு மாகாணத்தில் இன்று 704 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது..!
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினரில் இன்றைய நான்காம் நாளில் 704 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கடந்த நான்கு நாட்களில் வடக்கு மாகாணத்தில் 7 ஆயிரத்து 925 சுகாதாரத்துறையினருக்கு கோவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது மொத்த உத்தியோகத்தர்கள் எண்ணிக்கையில் 80 சதவீதமாகும் எனவும் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் மாத்திரம் 165 கொவிட் 19 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் வைத்திய அதிகாரி மருத்துவர் கதிர்காமநாதன் சுதாகர் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணினையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 8702 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.