யாழ். மாவட்ட மக்களுக்காக பிரதமர் மஹிந்த எடுத்த நடவடிக்கை - வழங்கப்பட்டது அனுமதி
யாழ்ப்பாண மாவட்டத்தில் காணி இல்லாத உள்ளக இடம்பெயர்வு குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்கு பிரதமரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
யாழ். மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில் தற்போது 409 குடும்பங்கள் வாழ்கின்றனர்.
இவர்களில் 233 குடும்பங்களுக்கு அரச மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் அடிப்படையில், 10 முதல் 20 பேர்ச்சர்ஸ் காணியினை தனியார் உரிமையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான யோசனை ஒன்றினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.
அத்துடன்

அத்துடன் அந்த காணியில் தொடர்ந்து வீடுகளை நிர்மாணிப்பதற்கான பொறிமுறையை தயாரித்து இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன்படி, 7 இலட்சம் ரூபாவுக்கு அதிகரிக்காது இந்த காணிகள் தனியார் உரிமையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளது.
பொறிமுறையை தயாரித்து இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.