யாழ் அச்சுவேலியில் கலியாணத்துக்கு முதல்நாள் ஓட்டம் எடுத்த முல்லைத்தீவு மாப்பிளை!!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் திருமணத்திற்கு முதல்நாள் மணமகன் மாயமானதால், திருமண நிகழ்வு இரத்தாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், அச்சுவேலியை சேர்ந்த யுவதிக்கும், புதுக்குடியிருப்பு கோம்பாவிலை சேர்ந்த இளைஞனிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 27ஆம் திகதி புதுக்குடியிருப்பு சிவன் ஆலயத்தில் திருமண நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருமண தினத்தில் மணப்பெண்ணும், குடும்பத்தினரும் புதுக்குடியிருப்பு சென்றனர். எனினும், மணமகன் தரப்பினர் ஆலயத்திற்கு வரவில்லை. பெண் வீட்டார் நீண்டநேரமாக காத்திருந்து, இறுதியில் தொலைபேசியில் மாப்பிள்ளை தரப்பை தொடர்பு கொண்டபோது, முதல்நாள் இரவு மணமகன் காணாமல் போய்விட்டார் என கூறப்பட்டது.
பல இடங்களில் தேடியும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை. திருமணம் நிச்சயிக்கப்பட்ட தினத்தில், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில், தனது மகனை காணவில்லையென மாப்பிள்ளையின் தந்தை முறைப்பாடு செய்தார்.
இந்நிலையில் காத்திருந்த பெண் வீட்டார் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
திருமணத்திற்கு மறுநாள், மீண்டும் பொலிஸ் நிலையம் சென்ற தந்தை, மாப்பிள்ளை வீடு திரும்பி விட்டார் என தெரிவித்து, முறைப்பாட்டை மீளப்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.