வடக்கு மாகாணத்தில் இன்று தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் வெளியான செய்தி
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் இன்றைய மூன்றாம் நாளில் 2 ஆயிரத்து 694 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று நாள்களில் வடக்கு மாகாணத்தில் 7 ஆயிரத்து 221 மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இது மொத்த உத்தியோகத்தர்கள் எண்ணிக்கையில் 73 சதவீதமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பவதிகள் மற்றும் கர்ப்பம் தரிக்க காத்திருப்போர் இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே அவர்களை தவிர்ந்த ஏனைய அனைவரும் கொவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள நாளை மேலும் ஒருநாள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்