"ஆடுகளத்தில் நீண்ட நேரம் விக்கட் காப்பாளராக பணியாற்றுவது சவாலானதொரு விடயம்" - பென் போக்ஸ்
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நீண்ட நேரம் விக்கட் காப்பாளராக பணியாற்றுவது சவாலானதொரு விடயம் என இங்கிலாந்து கிரிக்கட் அணி வீரர் பென் போக்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கட் சபை போட்டிகளில் வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த தீர்மானித்துள்ளதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பென் போக்ஸ் விக்கட்காப்பாளராக செயற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை அல்லது ஆசிய நாடுகளில் நீண்ட நேரம் மிகவும் கவனமாக செயல்படுவது என்பது கடினம்.
அத்துடன் பலமான துடுப்பாட்ட வரிசையினை கொண்ட இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது தமக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் பென் போக்ஸ் குறிப்பிட்டுள்ளார்