தாயாருடன் தகராறு - யாழில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு
தீக்காயங்களுக்கு உள்ளான நபர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த கோபாலசுந்தரம் கவிதாஸ் (வயது 33) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டில் தாயாருடன் சண்டை பிடித்துவிட்டு தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தாயாரை அச்சுறுத்துவதற்காக செய்த விளையாட்டே வினையாக மாறியுள்ளது.
கடந்த 28ஆம் திகதி இவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.