யாழ் - வேலணையில் பதற்றம்! பொலிஸார் குவிப்பு
வேலணை பிரதேச செயலர் எஸ். சோதிநாதனின் இடமாற்றத்துக்கும் புதிய செயலாளர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பிரதேச செயலக வாயிலை மூடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் பேருந்தில் பொலிஸார் வந்திறங்கி ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வோம் என எச்சரித்ததால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.
வேலணை பிரதேச செயலாளர் எஸ்.சோதிநாதனுக்கு இன்று நடைமுறைக்கு வரும் வகையில் வவுனியா வெண்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளராக இடமாற்றம் வழங்கப்பட்டது.
அத்துடன் வவுனியா வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலாளர், எஸ்.சிவகரன், வேலணை பிரதேச செயலாளராக மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் புதிய பிரதேச செயலாளர் இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்கவிருந்த நிலையில் பிரதேச மக்கள் பிரதசே செயலக வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை அறிந்த பொலிஸார், இன்று முற்பகல் 10 மணியளவில் பேருந்து ஒன்றில் வந்து இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்வோம் எனவும் கலைந்து செல்லுமாறும் தெரிவித்தனர்.
அதனால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது. அத்துடன் புதிய பிரதேச செயலாளரை கடமையேற்க வைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.